செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் புதிய பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல்.

84

செட்டிகுளம் மகா வித்தியாலய மைதானப் பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

வ/செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் மைதானப் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (06.10.2026) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு. ச. கமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலையின் உப அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ள இந்தப் பார்வையாளர் அரங்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், 2027 ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் பாடசாலை விளையாட்டு மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.