கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி.!!

72

கொழும்பு 4, தும்முல்லைச் சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் பெற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, நகரில் நிலவிய கடுமையான உஷ்ணம் காரணமாக திடீரெனத் தீப்பிடித்து முற்றிலுமாக நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி | Three Wheeler Suddenly Catches Fire In Colomboஎனினும்  , அதற்குள் அந்த வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. எவ்வாறாயினும், இச்சம்பவத்தில் விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.