கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டது – மட்டக்களப்பில் அதிர்ச்சி திருப்பம்

1498

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி, வெல்லாவெளி பிரிவிற்குட்பட்ட 40ஆம் கிராமம் வம்மியடியூற்று பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி சென்ற இளம் பெண் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனைத் தொடர்ந்து, இம்மாதம் 20ஆம் திகதி நாற்பது வட்டை – நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் குற்றுயிர் நிலையில் இருந்ததுடன், மற்றையவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் பழுகாமத்தில் காணாமல் போன 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.