கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

220

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு இன்னும் சீர்செய்யப்படாததால், நாளை (பெப்ரவரி 15) பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கோ அல்லது ஏனைய பிரதேச அலுவலகங்களுக்கோ வருகை தர வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் வழமையான சேவைகள் வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 16) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வருகை தந்து, தொழிநுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்களுக்கும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும்.

சேவைகள் வழமைக்கு வரும் வரை பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.