ஓமந்தையில் மின்மாற்றியை உடைத்து பெறுமதியான உபகரணங்கள் திருட்டு – பொலிஸார் தீவிர விசாரணை.!!

113

வவுனியா, ஓமந்தை, கொம்புவைத்த குளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியை (திரான்ஸ்போமர்) இனம் தெரியாத நபர்கள் அகற்றியதுடன் அதில் இருந்த பெறுமதியான உபகரணங்களை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மின்தடை நேரத்தில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றி அகற்றப்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மின்சாரபையின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் மின்தடை நேரத்தில் மின்மாற்றியை திருடிச்சென்ற நபர்கள் : பொலிஸார் விசாரணை..! | Transformer Vavuniya During Power Outage

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மின்மாற்றியானது மின்சார தூணில் இருந்து அகற்றப்பட்டு, உடைக்கப்பட்டு அதில் இருந்த பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.