உணவில் விஷம் வைத்து சுரேஷ் சலேவை கொல்ல போடப்பட்ட இரகசிய திட்டம்.!

115

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, பெப்ரவரி 25, 2026 அன்று குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், சுரேஷ் சலேவின் பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டுள்தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி இருக்கலாம் என குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்து உணவு வழங்க நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டுள்ளது.

இதற்கு குற்றப் புலனாய்வுத் துறை அனுமதிக்கவில்லை. சந்தேக நபரை CID வளாகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பேசப்பட்டது.