இலங்கையில் வீதி புனரமைப்பு பணிகளில் ஜப்பானிய பல்கலைக்கழக மாணவர்கள்.!!

133

இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகளில் ஜப்பானிய மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 15 ஜப்பானிய மாணவர்களின் தலைமையில் நேற்று வீதி அமைக்கும் பணி நடைபெற்றது.

15 ஜப்பானிய பல்கலைக்கழக மாணவர்கள் வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 10 நாட்கள் தங்கி, அப்பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.

அதற்கமைய நேற்று சுசிரிகம கிராமத்தில் ஒரு பாழடைந்த வீதியை தங்கள் சொந்த செலவில் அமைத்து கொன்கிரீட் போடும் பணியைத் தொடங்கினர் என திட்ட இயக்குநர் ஜெயதிலக பெரேரா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் சுசிரிகம கிராமத்தின் சிறுவர்கள் மற்றும் பெற்றோருடன் சிரமதானத்தில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.