இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

229

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 237 விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனையில் இக்கைது இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இப்புறாக்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களுக்குள் மறைத்து கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், பறிமுதல் செய்யப்பட்ட 237 புறாக்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நெடுந்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது.